மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்

பிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain Chip - Micro) உருவாக்கி வருகின்றது. இந்த‌ சிப்களை வைத்து மக்களை வேண்டுமென்றபோது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.
மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கர்னல் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் (Brain Chip Implant Technology) நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் (Alzheimer) போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களில் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜான்சன் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை