ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் எமிஸ் ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன...


இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள் , மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி தேர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக Emis என்ற ஆன்லைன் தளத்தில் தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இந்த பதிவுகளை தாங்களே மேற்கொண்டு வருவதால் பாடம் நடத்த நேரமில்லை என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .எமிஸ் ஆன்லைன் பதிவு பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று முதல் ஆன்லைன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் Emis ஆன்லைன் பதிவு பணி தொய் வடைந்துள்ளது.


அதுவரை பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தி Emis பணிகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் ..

Comments

Popular posts from this blog

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை