256 வயதான நபர் மரணப்படுக்கையில் கூறிய இரகசியம்.!

லீ சிங் யூன் என்ற நபர் சீனாவில் 1677 ஆம் ஆண்டு பிறந்தார் என்கிறது அவரது நண்பரும், இந்த வரலாற்றை நமக்கு கூறுபவருமான குறிப்பிட்ட ஒரு நபர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய அந்த ஆவணம். மே 6, 1933 அன்று மிக பிரபல பத்திரிக்கை ஒன்று, விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், இந்த கதையின் கதாநாயகனின் இறப்பிற்கு பிறகு, முதன்முதலாக உலகின் மிக வயதாக நபரைப் பற்றி பேசுகிறது.

அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த இந்த நபர், மூலிகைகளை ஆய்வு செய்யவும், தியானம் செய்யவும், உடலை இயக்கத்திலேயே வைத்திருக்கவும் தனது வாழ்க்கையையே அர்பணித்தவர். இவர் ஒரு வைத்தியர், இயற்கை ஆர்வலர்,உணவுமுறை வல்லுநர் மற்றும் இராணுவ தந்திரர்.
குழந்தைபருவம் முதலே தற்காப்பு கலைகளை கற்ற யூன், சிறப்பு மூலிகைகளுக்கு பெயர்பெற்ற பகுதிகள் முழுவதும் பயணம் செய்து, அவற்றின் மருத்துவ குணங்களை கண்டறிந்தார். அவருக்கு 10 வயது இருக்கும்போதே, இடைவிடாத ஆராய்ச்சியின் காரணமாக மிகப்பெரிய மருந்தகத்தை வைத்திருந்தார். தனது 70 வயதில் இராணுவத்தில் சேர்ந்த யூன், தற்காப்பு கலை ஆசிரியராகவும், தந்திர ஆலோசகராகவும் விளங்கினார். அவரது 90வது வயதிலும் கூட ஒரு சுறுசுறுப்பான, வலுவான, நெகிழ்வான, கூர்மையான மனமுடையவராக, சொற்பொழிவு ஆற்றும் வகையில் மிகுந்த குரல் வளம் உடையவராக நபராக இருந்தார் என கூறப்படுகிறது.
உலகின் மிகவயதான நபர்
தயோயிசத்தை பின்பற்றுபவரான இவர், தனது ஆன்மிக வாழ்க்கையை திபெத்தில் அர்பணிப்புடன் நடத்தி வந்தார். இருந்தாலும் மூலிகைகள் மீதான ஆர்வம் எப்போதும் அவருடனேயே இருந்தது. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தயோயிசம் மற்றும் தியானத்திற்கு தன்னை முழுவதுமாக அர்பணித்த பின்னரும், தொடர்ந்து மூலிகைகளை உட்கொண்டதன் காரணமாகவே ,எப்போதும் இளமையுடன் இருந்ததாக கூறியுள்ளார் லீ யூன்.
இளமையான மனநிலை மற்றும் உடல் காரணமாக இவர் மருந்து தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.இவரது வீட்டிற்கு அருகில் வசித்த முதியவர்கள் கூறுகையில், லீ சிங் யூனை தங்களது தாத்தா பாட்டி மூலம் அறிந்ததாகவும், இன்னுமும் இளமையான மனிதரை போல இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கதைகளின் மூலம் நமது கதையின் வழிகாட்டி நாயகனின் நீண்ட நெடும் வாழ்க்கை உறுதிபடுத்தப்படுகிறது.
லீ யூனின் உணவு பழக்கமுறை என்பது அரிசி ,மூலிகை மற்றும் அரிசி வைன்-ஐ உட்கொள்வதாக இருந்தது. 130வது வயதில் அவர் சந்தித்த துறவி ஒருவர், சுவாசித்தல் வழிமுறை,ஒருங்கிணைந்த இயக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட ஒலிகளை கற்றுகொடுத்தது, வாழ்க்கையை சமநிலைப்படுத்த உதவியுள்ளது.

அவரது இறுதி வார்த்தைகள் "இந்த உலகில் நான் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் செய்து விட்டேன்" என்பது தான்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை