தமிழகத்தில் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என்றாலும், இந்த காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுபவர்கள் 3 முதல் 4 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

எந்தெந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமான நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ
அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதம் 30ம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என்ற மத்திய அரசின்
அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.

 இந்த வாரம் 50,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப
சுகாதார நிலையங்கள் வட்டார சுகாதார நிலையங்கள் என 11,33 மருத்துவமையங்களில்
புதன்கிழமை வரும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். வரும் அக்டோபர் 4ம் தேதி 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 91 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்ற அவர், தமிழகத்தில் மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்கள் 4308 காலி பணியிடங்கள் அனைத்தும் இரண்டு மாதத்திற்குள் முழுமையாக நிரப்பப்படும் என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை