சிந்தனை கதை ICT CHANNEL

சிந்தனைக் கதை..

ஐந்தறிவு பிராணி கேள்விக்கு தடுமாற்றம்னா ஆறறிவு..?

மிகவும் படித்த ஒரு பணக்கார இளைஞன் விமானத்தில் ஏறினான். நீண்ட நேரம் செல்ல வேண்டிய பிரயாணம் என்பதனால் அவனுக்குப் போரடித்தது. தன்னுடைய அறிவுத் திறமையை யாரிடமாவது அவிழ்த்து விட்டு அவர்களைச் சீண்டிப் பொழுதைக் கழிக்க எண்ணினான். 

பயணிகள் யாரும் அவனிடம் சிக்குவதாய் இல்லை. பணிப்பெண்களை வம்பிற்கு இழுத்துப் பார்த்தான். அவர்கள் சிரித்துக் கொண்டு போனார்களே தவிர அவனுடன் மோதவில்லை. வெறுத்துப் போன இளைஞன் விமானம் முழுவதும் பார்வையை சுழல விட்டதில் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்து வயது சிறுவன் பட்டான்.

வீடியோ கேமை மும்முரமாக விளையாண்டுக் கொண்டிருந்த சிறுவனிடம், "தம்பி! முட்டாள்கள் தான் விளையாடிப் பொழுதைக் கழிப்பார்கள். உன் வயதில் கரிகால்சோழன் அரியணை ஏறி விட்டான். உனக்கு தில் இருந்தா என்னுடன் அறிவுப்பூர்வமாக மோதி வெற்றி கொள் பார்ப்போம்"

தலையை நிமிர்த்தாமலே, "ஓ.கே! எதைப் பற்றி பேசலாம்?"

உற்சாகமான இளைஞன், "உனக்கு தகுதி இருந்தால் நியூக்ளியர் தியரியைப் பற்றிப் பேசலாம்!"

"சரி! அதற்கு முன் உனக்கு ஒரு கேள்வி. ஒரே நேரத்தில் ஒரு மாடு, ஒரு ஆடு, ஒரு யானை ஆகிய மூன்றும் புல்லைத் தின்றன. சிறிது நேரத்தில் மாடு சாணி போட்டது. ஆடு புழுக்கை போட்து. யானை லட்டி போட்டது. ஒரே உணவைத் தின்ற மூன்று பிராணிகளும் ஒரே விதமாகப் கழிவினைப் போடாமல் வேறு வேறு விதமாகப் போடக் காரணம் என்ன?"

நீண்ட நேரமாக யோசித்த இளைஞன், "தெரியலியே தம்பி!"

சலிப்பாக அந்த சிறுவன் தலை நிமிர்ந்து,"ஐந்தறிவு பிராணிகள் ஒன்றுக்கும் ஆகாது என நினைத்துக் கீழே போடும் சமாச்சாரத்தைப் பற்றியே உனக்கு எதுவும் தெரியவில்லை. இதில் ஆறறிவு மனிதர்கள் சம்பந்தப்பட்ட நியூக்ளியர் தியரியைப் பற்றி பேச உனக்கு எங்கே தகுதி இருக்கப் போகிறது? போய் பேசாமல் தூங்கு!!

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை