எல்லாம் இன்ப மயம் - வாழ்க்கைத் தத்துவம்

எல்லாம்  இன்பமயம்
      
"நம்முடன் கடைசி வரை வருவது எது?"
      
      
காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றார் காவலர். என்ன வேண்டும் உமக்கு? 
நீதான் வேண்டும்! 
என்ன சொல்கிறீர்? 
உன்மீது ஒரு புகார் வந்திருக்கிறது. அது பற்றி விசாரிக்க அதிகாரி விரும்புகிறார். நாளைக்கு நீ காவல் நிலையம் வரவேண்டும். இப்படிச் சொல்லிவிட்டுக் காவலர் போய் விட்டார். 

இவன் யோசித்தான். நாம் எந்தத் தப்பும் செய்யவில்லையே என்று தனியே செல்லத் தயங்கி யோசித்து கொண்டிருந்தபோது நெருங்கிய மூன்று நண்பர்கள் அவனது நினைவிற்கு வந்தார்கள்.

அந்த மூவரில் ஒருவன மிகவும் நெருக்கமானவன். அந்த முதல் நண்பனைப் பார்த்து விவரம் சொன்னான். காவல் நிலையம் வந்து நீ எனக்காக வாதாடணும் என்றான். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டான் அவன். இவனுக்கு அதிர்ச்சி, இவனே இப்படி சொல்லிவிட்டானே என்கிற வேதனையுடன் அடுத்த இரண்டாவது நண்பனைத் தேடிப் போனான். 

அவனிடம் விவரம் சொன்னான். வரமுடியாது என்று சொல்லவில்லை. நான் வருகிறேன். ஆனால் காவல் நிலைய வாயில் வரைதான் வரமுடியும். அதைத் தாண்டி என்னால் வரமுடியாது என்றான். வாசல் வரைக்கும் வந்து என்ன பயன்? எனவே, மூன்றாவது நண்பனிடம் போனான். 

அவன் மிகவும் நெருக்கம் இல்லாதவன் என்றாலும் விவரம் கேட்டவுடன் எதுவும் சொல்லாமல், உடனே புறப்படு, 
அவன் கடைசிவரை வந்தான். காவல்நிலைய அதிகாரியிடம் பரிந்து பேசினான். பிரச்னையிலிருந்து விடுவித்தான்.

 சரி! அந்த மூன்று நண்பர்கள் யார் தெரியுமா? முதல் நண்பன் பணம், இரண்டாவது நண்பன் சொந்தம், மூன்றாவது நண்பன்  நற்செயல்கள்.கடைசி வரையில் நம்மோடு வந்து நம்மைக் காப்பாற்றுவது நாம் செய்கிற நல்ல செயல்கள் தான். 
 
இந்த நற்செயல்கள்  தான் நம்முடன் கடைசி வரைக்கும் வரும்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை