எல்லாம் மாயை-வாழ்க்கைத் தத்துவம்

_*'' எல்லாமே மாயை..''*_


_*இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது.*_ _*வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.பதவி,பட்டம்,*_
_*அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான்.*_

_இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்._

_*நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம்.*_

_சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம்..இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள்.._ 

_*சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான்.*_

_சாவி கொடுத்தால்  குரங்கு பொம்மை. ஆடும்.. டமாரம் தட்டும்.. தலையை ஆட்டும்,விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும்.._

_*ஒரு காவல்காரன்.*_ _*வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில்*_ _*”ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான்…*_
_*ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று….*_

_அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன்._ _இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ''ஜாக்கிரதை,ஜாக்கிரதை'' என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையை செய்தான்…_
_அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான்._

_*”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….*_

_ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?._

_*முதல் நாள் இரவு பையன், ” ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை..*_

_சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான்……_

_*அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா , தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை..*_

_இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை…._

_*ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா . உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள்.*_

_விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே.._  _உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து._ _விழித்துக் கொள்,_ 
_ஜாக்கிரதை ஜாக்கிரதை…_

_*மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம்.*_ _*நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள்,*_
_*இளமை, வாலிபம் நிரந்தரமல்ல..*_

_நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை,_ 

_*"இதில் நீ என்ன? நான் என்ன?, எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை,.*_

_உங்கள் புகழை, உங்கள் பதவியை_ _அதிகாரத்தை_
_ஒரு போதும்_ _நம்பாதீர்கள்"_
_இது எதுவுமே வச்சநிரந்தரம் கிடையாது"._

_*ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.*_

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை