*📌செயற்கை கருப்பை: வெளியறை ஆகும் கருவறை; ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும்!*

*📌செயற்கை கருப்பை: வெளியறை ஆகும் கருவறை; ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும்!*

இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதிர்ச்சியாக இருக்கலாம். காலத்தின் வேகத்தை உணரச் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமா என கேட்கச் செய்யலாம். அறிவியலின் புதிய படைப்புகள் எல்லாம் பிறக்கும்போது இப்படித்தான் மனிதனின் எண்ணங்களை துழாவிவிடும். அப்படி ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு குறித்த அறிவிப்புதான் இது.

மிகவும் பாதுகாப்பான இடம் எனப் பலரும் பொயட்டிக் ஆகச் சொல்வது, தாயின் கருவறையைத்தான். 10 மாதங்கள் ஓர் உயிருக்குள் இன்னோர் உயிர் ஊஞ்சலாடிய காலம். சிசுவின் சிறு சிறு அசைவுகளையும் உணர்ந்து சிலிர்த்த தருணங்கள். இப்படி, கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு மாதமும் தாய்க்கு பொக்கிஷம்.

ஆனால் இந்த கருவறை, வெளியறையானல் எப்படி இருக்கும்? அதாவது தாயின் வயிற்றில் வளரும் குழந்தையை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேட்பதற்கே ஹாலிவுட் படங்களில் வரும் குளோனிங் காட்சிகள் போல இருக்கிறதல்லவா? இந்த ஆராய்ச்சி சாத்தியப்படும் பட்சத்தில், ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆராய்ச்சி குறித்த மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) வெளியிட்டுள்ளது. அதில், ’புற்றுநோயால் கர்ப்பப்பையை இழந்த பெண்கள் மற்றும் பிற காரணங்களால் கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இது உதவும். அதோடு மக்கள் தொகை குறைவாக உள்ள ஜப்பான், பல்கேரியா, தென் கொரிய நாடுகளுக்கு இந்த செயற்கை கருப்பை வசதி பெரிதும் உதவும்.

தாயின் வயிற்றில் எப்படி ஒரு குழந்தை வளருமா, அப்படியே ஆய்வகத்தில் இந்த குழந்தை உருவாக்கப்படும். குழந்தையின் ஒவ்வோர் அசைவையும், துடிப்பையும் பெற்றோர் தங்கள் மொபைல் போனின் மூலம் அறிந்து கொள்ள முடியும். குழந்தையின் லைவ் வீடியோவும், வளர்ச்சியின் டைம் லாப்ஸ் வீடியோவும் வழங்கப்படும்.

இதற்கென கொடுக்கப்பட்ட ஆப் மூலமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன பாடலை கேட்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அனுப்பலாம் அல்லது அவர்களே பாட்டுப் பாடியும் அனுப்பலாம்.

இந்த Artificial Intelligence மூலமாக, குழந்தையிடத்தில் அசாதாரண வளர்ச்சி தெரிந்தாலும் கண்டுபிடித்து விடலாம். 360 டிகிரி வயர்லஸ் கேமரா குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பொருத்தப்பட்டிருக்கும். அதன்மூலம் குழந்தையின் இடத்தில் இருந்து குழந்தை பார்ப்பதைப் பார்க்கவும், குழந்தை கேட்பதை கேட்கவும் முடியும்’ என அடுக்கடுக்காக குழந்தை செயற்கை கருப்பையில் வளரும் விதம் குறித்து விவரித்துள்ளனர்.

இந்த கான்செப்டை உருவாக்கிய பெர்லினை தளமாகக் கொண்ட உயிரித் தொழில்நுட்பவியலாளர் மற்றும் அறிவியலாளரான ஹஷேம் அல்-கைலி கூறுகையில், ``இந்த வசதி எப்போதாவது நடைமுறைக்கு வந்தால், குழந்தையில்லாதம்பதிகள் ஒரு குழந்தையைக் கருத்தரிக்க முடியும் மற்றும் அவர்களே பயலாஜிக்கல் பெற்றோராகஇருக்கவும் முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பின் கான்செப்டுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை