உங்கள் ஸ்மார்ட்போனில் இலவசமாக லோகோ மற்றும் பேனர்களை உருவாக்குவது எப்படி?

இப்போது புதிய தொழில் துவங்கும் அனைத்து மக்களுக்கும் கண்டிப்பாக லோகோ கண்டிப்பாக தேவைப்படுகிறது, அதன்பின்பு யூடியூப், வலைதளம் போன்ற அனைத்து பயன்பாடுகளுக்கும் தற்சமயம் குறிப்பிட்ட அடையாளம் கொண்ட லோகோ தேவைப்படுகிறது. பொதுவாக லோகோ-வை உருவாக்குவதற்கு கண்டிப்பாக கணினி அல்லது லேப்டாப், சாதனங்கள் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
ஆனால் நீங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டும் எளிமையாக லோகோவை உருவாக்க முடியும். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட ஆப் வசதியை கொண்டு இலவசமாக லோகோவை உருவாக்க முடியும். மேலும் லோகோ மற்றும் பேனர்களை உருவாக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.
வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் LogoPit plus-எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
வழிமுறை-2:
அதன்பின்பு இந்த செயலின் முன்புறம் விருப்பங்கள் இருக்கும், அதவாது ஃபேஸ்புக் பேனர், யூடியூப் கவர், டிவிட்டர்வால் பேப்பர் மற்றும் லோகோ போன்ற பல்வேறு விருப்பங்களும் இருக்கும், இதில் உங்களுக்கு தேவையான பயன்பாட்டை தேர்வு செய்துகொள்ள முடியும்.
வழிமுறை-3:
குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள லோகோ-வை கிளிக் செய்யதால், மிக அதிகமான டிசைன் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும்.
App download Link
https://play.google.com/store/apps/details?id=com.logopit.logoplus&hl=en_IN&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Dlogo+pit+plus&pcampaignid=APPU_1_fcpoXMbcHtC6rQHOsquAAw

நாளைய மாற்றத்்துடன்

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை