சற்று நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே அதிரப் போகுது

.44 வீரர்கள் வீரமரணம்: பதிலடிக்கு தயாராகும் இந்திய ராணுவம்; சற்றுமுன் இணைய சேவை துண்டிப்பு
15 Feb. 2019 07:42

ta.puthiyathalaimurai.com
Author
+ FOLLOW

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்தனர். புல்வாமா மாவட்டத்தின் அவாந்திபோரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எப். பே‌ருந்து மீது மோதியது. இதில், சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்த சத்தம்,‌ 12 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்‌ளனர்.



இந்த மனித வெடிகுண்டு‌தாக்குதலில், பேருந்தில் பயணித்த 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களில், 44 பேர்‌ உயிரி‌ழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச்‌ சேர்ந்த சுப்ரமணியன் என்பவரும் வீரமரணமடைந்துள்ளார். பாதுகாப்பு வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ்-இ-முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் வீடியோவையும், தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தையும் அந்த அமைப்பு வெளியிட்டது‌.



பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும், அதுவரை ஓயமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்‌சிங் தெரிவித்துள்‌ளா‌ர். சிஆர்பி‌எப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர்‌ ராம்‌நாத் கோவிந்த், பிரதமர்‌ நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்‌ ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்‌காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. இதனிடையே பாதுகாப்பு தொடர்‌பான அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில்‌ இன்று காலை ‌நடைபெறுகிறது.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை