காற்று மாசுபாட்டை அகற்ற புது வழி, தேன்-கூடு போன்ற 3D பொருள் உருவாக்கம்

விஞ்ஞானிகள் நெகிழ்வான, துவாரங்களுடைய‌ 3D பொருள் ஒன்றை (flexible, 3D porous material) உருவாக்கியிருக்கிறார்கள். இது ஒரு தேன்கூட்டை (honeycomb) போன்ற‌ வடிவத்தினைக் கொண்டுள்ளது. இதனால் காற்றிலுள்ள மாசுக்கள் அல்லது வைரசுக்களை வடிகட்டி (pollutants or viruses) அகற்ற இயலும் என‌ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் கிங் அப்துல்லா பல்கலைக்கழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (King Abdullah University of Science and Technology : KAUST) விஞ்ஞானிகள் குழுவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, சீரான‌ துவாரம் மற்றும் வடிவங்களால் மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கும் படிநிலை அமைப்பினை உடைய‌ 3D பொருளினை ஐந்து நிமிடங்களில் தயாரிக்க முடியும் என‌ விளக்கியுள்ளனர்.

இதனை விளக்க‌ பாலிஸ்டிரேனெ-பி-பாலி (டெர்ட்பியூட்டைல் அக்ரிலேட்) என்று அழைக்கப்படும் கோபால்லிமரினை (copolymer called polystyrene-b-poly (tertbutyl acrylate) (PS-b-PtBA) பயன்படுத்தி உள்ளனர்.

இம் முறையின் ஊடாக செயற்கையான சிக்கல்தன்மை வாய்ந்த நுண்ணிய பொருட்களைக்கூட வடிகட்ட முடியும் என குழுத் தலைமையான‌ ஸ்டீபன் சிஸ்கா (Stefan Chisca) தெரிவித்துள்ளார்.

மேலும் இவை வைரஸ் வடிகட்டுதல், உயிரியல் சாரக்கட்டுகள் (எலும்பு மீளுருவாக்கம்) (virus filtration, and for biological scaffolds, such as those used for bone regeneration) போன்ற பிரிவினருக்கு சாத்தியமான பயன்பாடுகளை வழ‌ங்கக் கூடும்," எனவும் சிஸ்கா கூறினார்.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை