தேசியக்கொடி - தகவல் களம்

தேசியக் கொடி - சில தகவல்கள்

தேசியக் கொடியைக் காலை நேரங்களில் ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கப்பட வேண்டும். கொடியை இறக்கும்போது நிதானித்து மெதுவாக இறக்கவேண்டும். கொடி தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ தவறு. ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்ட இரவுகளில் உதாரணமாக சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழாவில் பறக்க விட அனுமதி உண்டு.

தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்போது முதல் வரிசையில் வலதுபுறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

செய்யக் கூடாதவை:

சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.

முக்கியஸ்தர்களுக்கு மரியாதை  அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.

தேசியக் கொடியை அலங்கார பொருளாக மேடையிலோ. மேஜை மீதோ விரிக்கப்படக் கூடாது.

கொடியேற்ற விழா முடிகையில் ‘ஜனகன மன’ தேசிய கீதத்தைப் பாடத் தவறக் கூடாது.

தேசிய கீதம் பாடப்படும்போது கூடியுள்ளோர் பணிவுடன் அசையாது நிற்கத் தவறக்கூடாது.

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை