உலகில் யார் ? முட்டாள்

முட்டாள்களின் கீழ் உலகம்

சிரிப்பூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்கிறது; அது நைட்ரஸ் ஆக்ஸைடு. ஆனால் கோபமூட்டுவதற்கு ஒரு வாயு இல்லை. அதற்கு பதிலாகத்தான் நமக்கு வாய் இருக்கிறதே! வாய் உதிர்க்கும் சொற்களில் மிகவும் கோபமூட்டும் சொல் எதுவென்றால் “முட்டாள்” என்பதுதான்.

 “அடேய் முட்டாள் புருனோ! நீ சொல்வதைப்போல உலகம் உருண்டையானது என்றால்; சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?” இது மதக்குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில் “அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?”. நீதிபதி கேள்விக்கு புருனோவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் புருனோவின் கேள்விக்கு இதுநாள் வரைக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லையே!. முட்டாள் யார், புத்திசாலி யார் ? என முடிவு செய்வது காலமே தவிர மதமோ, மனிதர்களோ அல்ல.

 பிரெஞ்ச் உளவியலறிஞர் ஆல்பர்ட் பினே மனிதனின் கால வயதை மன வயதால் வகுத்து சதவீதமாக மனிதனின் நுண்ணறிவை வகைப்படுத்தினார். இதன்படி முட்டாள், பின்னடைந்தோர், பின் தங்கியோர், திறனுடையோர், புத்திசாலிகள், மிக்க திறனுடையோர், மேதைகள் என அட்டவணைப்படுத்தினார். உலக மக்கட்தொகையில் ஒரு சதவீதம் மேதைகளாகவும், ஒரு சதவீதம் முட்டாள்கள் இருப்பதாகவும் அவரது கோட்பாடு கூறுகிறது. அவரது கோட்பாட்டின்படி 50 முதல் 69 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் முட்டாள்கள் என்றும் 140 முதல் 169 வரை பெற்றவர்கள் மேதைகள் என்றும் கருதப்படுகிறார்கள்.

 பினே கோட்பாட்டை தழுவி ஆய்வு மேற்கொண்ட உளவியல் அறிஞர்கள் பார்வையில் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மேதைகளின் மேதையாக பார்க்கப்படுகிறார். சாக்ரடீஸ் வாழ்ந்த காலம், அவர் சந்தித்த நெருக்கடி, அந்த வேளையில் அவரது நுண்ணறிவு இவற்றை வைத்து பார்க்கையில் அவருடைய நுண்ணறிவு ஈவு நூற்று எழுபதற்கும், இருநூறுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சாக்ரடீஸ் கருத்துகளை வழிமொழிந்த பிளேட்டோ, அரிஸ்டாடில், புருனோ போன்றவர்கள் இன்றைய சராசரி மேதையை விட மேலானவர்களே!. இது ஒரு புறம் இருக்க மற்றொரு உளவியலாளர் கில்கிறிஸ்ட் மேதைகள் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு முட்டாள் பிறக்கவேயில்லை என்கிறார்.

 கடந்த நூற்றாண்டில் மூளையை அதிகமாக பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தானாம். அவர் கண்டுப்பிடித்த சார்புநிலை தத்துவம் உலக தத்துவங்களில் தலை சிறந்தது. அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள் என பாவிப்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வர பெரிய பாதையும், அதன் குட்டிகள் வெளியே வர சிறிய பாதையும் வைத்திருந்தார். தாயும், குட்டியும் வெளியே வர ஒரு பொது வழி போதும் என்கிற பொது அறிவு அவரிடம் இல்லையே! என அவரை கிண்டல் செய்யும் ஞானிகள் அவரது காலத்திலிருந்தே இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

முட்டாள் என சித்தரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் என சொன்னதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான், பிற்காலத்தில் நவாப்களை வென்று ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படும் இராபர்ட் க்ளைவ்.

ஜெர்மினிய சர்வதிகாரி ஹிட்லரை இரண்டு நிகழ்வுகள் அதிகமாக கோபமூட்டின. ஒன்று சார்லி சாப்ளினின் திரைப்படங்கள். 1940 ஆண்டு சாப்ளின், த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் ஆட்சியை நையாண்டி செய்தார். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்துப் படங்களிலும் சாப்ளின் ஹிட்லரைப் போல மீசை வைத்து நடித்தார். இந்த நடவடிக்கை ஹிட்லரை அதிகம் கோபமூட்டினாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டும் வந்துவிட்டான். ஆனால் ஹிட்லரின் ஆட்சி முட்டாள் ஆட்சி என்று சொன்ன யூதர்கள் மீதான கோபம்தான் கடைசி வரைக்கும் அவனை கோபமூட்டிக் கொண்டிருந்தது. அதற்காக யூதர்களை அவன் கொத்துக்கொத்தாக கொன்று குவித்தான். இன்று இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஹிட்லர் பெயர் தடை செய்யப்பட்ட சொல்லாக இருப்பதைப்போல ஹிட்லர் அவையில் முட்டாள் என்கிற சொல் தடை செய்யப்பட்ட சொல்லாக இருந்தது.

 முட்டாள் என்கிற சொல் விளையாட்டு துறையிலும் அதிகம் விளையாடிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் இங்கிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதை எழுத்துலக வேந்தன் பெர்னாட்ஷா இவ்வாறு விமர்சித்தார். “பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பது கிரிக்கெட்”. உலக கிரிக்கெட் ரசிகர்களையும், அதை நடத்தும் 

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை