ப்ரீ சாப்ட்வேர் ஓர் அறிமுகம்

ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்

அறிவியல்
வண்டியில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிற்கு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். எதிர்பாராமல் வண்டி பஞ்சராகி நின்று விடுகிறது. அடடா! இது என்ன சோதனை என்று நினைத்த படி, பக்கத்தில் உள்ள பஞ்சர் பார்க்கும் கடைக்கு வண்டியைக் கொண்டு போய் விடுகிறீர்கள். திடீரென ஒரு கை உங்கள் கையைப் பற்றுகிறது. 'சார்! என் பெயர் குமார். நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியைத் தயாரித்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வண்டி வாங்கி விட்டு வேறு ஒருவரிடம் பஞ்சர் பார்க்க விட முடியாது. பாருங்கள் - இந்தக் கடை ஊழியரால் எங்கள் வண்டி டயரைக் கழற்றவே முடியாது' என்கிறார். நீங்கள் திரும்பிப் பார்க்கிறீர்கள். அவர் சொன்னது போலவே, கழற்ற முடியவில்லை.

richard stallman'இதென்ன அநியாயம்? காசு கொடுத்து வண்டி வாங்கிய பிறகு, அந்த வண்டியைக் கழற்ற எனக்கு உரிமை கிடையாதா?' என்று கேட்பீர்கள் இல்லையா? 'ஆமாம் சார்! உங்கள் வண்டியை நாங்கள் மட்டும் தான் சரி பார்க்க முடியும். அதற்கும் நீங்கள் தனியாக வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று பணம் கட்டினால் மட்டும் தான் வண்டியைத் தொட்டே பார்ப்போம் – இல்லாவிட்டால் நீங்கள் ஓட்டை வண்டியோடு உலாவ வேண்டியது தான்! பாருங்கள், நீங்கள் இதற்கெல்லாம் சம்மதம் சொல்லித் தான் வண்டி வாங்கியிருக்கிறீர்கள்' என்று ஓர் ஆவணத்தைக் காட்டுகிறார் குமார்.

இது ஒரு கற்பனை தான்! வண்டி மட்டுமல்ல, டிவி, செல்போன், பேன், மிக்சி, கிரைண்டர் என்று எந்தப் பொருளானாலும் சரி, வாங்கிய பிறகு அதன் முழு உரிமையும் வாடிக்கையாளருக்குத் தான்! அதை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு, என்று என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதை எல்லாம் செய்வதற்கு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் அனுமதியெல்லாம் தேவை இல்லை.

ஆனால் இந்த உரிமை நீங்கள் வாங்கும் புரோபரைட்டரி சாப்ட்வேருக்குக் கிடையாது. புரோபரைட்டரி சாப்ட்வேரா – அப்படி என்றால் என்று குழம்ப வேண்டாம். இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்காத எல்லா சாப்ட்வேரும் புரோபரைட்டரி சாப்ட்வேர் தான்! எ.கா. உங்களுக்கு நன்கு தெரிந்த விண்டோஸ். விண்டோசில் இயங்கும் உங்கள் கணினியின் ஓஎஸ் பழுதாகி விட்டால், விண்டோசில் என்ன பிரச்சினை என்று பார்க்கவே முடியாது - விண்டோசை நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் கட்டியிருந்தால் ஒழிய! விண்டோசுக்கு மட்டுமல்ல, புரோபரைட்டரி சாப்ட்வேர் எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கும் இதே கதை தான்! இது என்ன அக்கிரமமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வந்த நாயகன் தான் ஓப்பன் சோர்ஸ்!

அதென்ன ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறீர்களா? ஓப்பன் சோர்ஸ் கதைக்கு முன்னால் - சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? கிட்டத்தட்ட இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? அப்படித் தெரிந்து கொள்ள அனுமதிக்கும் மென்பொருட்களை ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் என்கிறார்கள். தமிழில் திறந்தமூல மென்பொருள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது!

இதென்ன புதுக்கதை? நான் ஒரு டிவியோ வண்டியோ வாங்கினால் கூட, உள்ளே என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கும் உரிமை எனக்கு இருக்கத்தான் செய்கிறது. அதே போல் தானே மென்பொருளுக்கும்! ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்கிய பிறகு அது வாடிக்கையாளருக்குத் தானே சொந்தம்? அவரால் அப்படி எல்லா மென்பொருட்களையும் திறந்து பார்க்க முடியாதா என்றால் முடியாது என்பது தான் உண்மை. என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதில் என்னென்ன இருக்கிறது என்று வாடிக்கையாளர் பார்க்கக் கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்? இதைக் கேள்வி கேட்க யாருமே இல்லையா? இதுவரை இதைக் கேள்வி கேட்ட ஒருவரும் இல்லையா? என் மென்பொருள் - என் உரிமை என்று உரிமைப் போராட்டத்திற்குத் தயாராகிறீர்களா?

கொஞ்சம் உங்கள் போராட்டத்தை ஒத்தி வையுங்கள். மென்பொருளில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கும் உரிமை எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தலைமுறைக்கு முன்னரே போராடத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போராடத் தொடங்கியவர்களுள் முக்கியமானவர் தான் ரிச்சர்டு ஸ்டால்மேன். ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள், படித்த பின் நன்றாக இருக்கிறதே என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் படிக்கக் கொடுக்கிறீர்கள். திரைப்பட சிடி ஒன்று வாங்குகிறீர்கள் - 

Comments

Popular posts from this blog

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை தமிழக அரசு பேச்சுவார்த்தை