கற்போம் எழுதுவோம் பயிற்சி மையத்தை முன்னறிவிப்பு இன்றி பார்வையிட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

 வாணியம்பாடி கல்வி மாவட்டம் ,மாதனூர் ஒன்றியம் கண்ணடி குப்பம் ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கற்போம் எழுதுவோம் (புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம்)பயிற்சி மையத்திற்கு முன்னறிவிப்பின்றி திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு சா. மார்ஸ் அவர்கள் பார்வையிட்டார். அம்மையத்தில் பயிற்சியில் கலந்துகொண்ட முதியோர்களிடம் பயிற்சியில் கலந்துகொண்டு கற்றுக்கொண்ட விஷயங்களை கேட்டறிந்தார். அவர்களில் சிறப்பாக எழுத்துப் பயிற்சி செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மையத்தின் தன்னார்வலர்/ பயிற்சியாளர்

திரு பா.ஆனந்தராஜ் 

பி இ அவர்களுக்கு சிறப்பாக பயிற்சி வழங்குவதற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். ஆய்வின்போது வாணியம்பாடி,

மாவட்ட கல்வி அலுவலர் எம் .முனி மாதன் , பள்ளி துணை ஆய்வாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் இருந்தனர்.



Comments